அஜீத் நடிக்கும் படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டு பெயர் வைத்துவிட்டதாகவும், ஆனால் அதை இப்போது வெளிப்படுத்த முடியாது என்றும் படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா ஜோடியாக நடிக்க, ஆர்யா - டாப்ஸி உடன் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் படம் இது.
இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை. தலைப்பை முன்கூட்டியே அறிவித்தால், அந்தப் பெயரில் ரசிகர்கள் இணையதளம், ஆப்ஸ் என அனைத்தையும் உருவாக்கி இம்சை தருவதால் அமைதி காப்பதாக கூறினர்.
இன்னொரு பக்கம் இதை வைத்தே கொஞ்ச காலத்துக்கு பரபரப்பாக செய்தியை கிளப்பலாம் என்ற அவர்களின் திட்டமும் பக்காவாக நிறைவேறி வருகிறது. வாரத்துக்கு ஒரு முறை இந்தப் படத் தலைப்பு குறித்து எதையாவது சொல்லி வைப்பார்கள் (தலைப்பைத் தவிர!).
அந்த வகையில் இப்போதும் தலைப்பு குறித்து பேசியுள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்தன். "அஜீத் படத்துக்கு மிகக் கஷ்டப்பட்டு தலைப்பு வைத்துவிட்டோம். முன்னெப்போதும் எங்களுக்கு இப்படி நேர்ந்ததில்லை. ஆனால் இப்போது அதனை அறிவிக்கப் போவதில்லை," என்றார்.
இந்தத் தலைப்பை அறிவிக்க தனி விழா எடுக்கும் திட்டமுள்ளதாம்..!
எப்படியோ.. ரிலீசுக்கு முன்னேயாவது சொல்லிடுங்கப்பா!!
Post a Comment