திருமணத்தின் மீது நம்பிக்கையில்லா ராம் கோபால் வர்மா மகளுக்கு நிச்சயதார்த்தம்

|

Ram Gopal Varma S Daughter Gets Engaged

ஹைதராபாத்: திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறும் இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது மகள் ரேவதிக்கு கமுக்கமாக நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார்.

சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை என்று கூறுவார். அப்படி இருக்கையில் எம்.பி.பி.எஸ். படிக்கும் அவருடைய மகள் ரேவதிக்கும், அவருடைய டாக்டர் காதலன் பிரவனுக்கும் கடந்த 2ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராடிஸன் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நிச்சயதார்த்தத்திற்கு இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே வர்மா அழைத்திருந்தார். மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது பற்றி வாய் திற்ககாமல் இருக்கிறார் மனிதர்.

இந்நிலையில் இது குறித்து ராஜமவுலி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

ரேவதியின் நிச்சயதார்த்தத்தில் ராம்கோபால் வர்மா ஒரு பொறுப்பான தந்தையாக செயல்பட்டதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. என்ன ஒரு காட்சி!!! ஹா ஹா ஹா என்று தெரிவித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் முடிந்தும் ராம் கோபால் வர்மா திருமணத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

 

Post a Comment