சென்னை: சேவை வரிக்கெதிராக திரையுலகினர் இன்று மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் கடைசி வரை கமல்ஹாஸன் பங்கேற்கவில்லை.
காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தொடங்கயி சில நிமிடங்களுக்குள் ரஜினி வந்துவிட்டார். மேடையில் சரத்குமார், ராதாரவியுடன் பகல் 12 மணி வரை அவர் அமர்ந்திருந்தார்.
பின்னர் சேவை வரியை திரும்பப் பெறுங்கள்.. மற்ற வரிகளை வசூலிக்கும் சட்டத்தைக் கடுமையாக்குங்கள். வரிகள் கட்டாதவர்களை கடுமையாக தண்டியுங்கள் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
மாலையில் கமல் வந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று தெரிவித்தனர். எனவே மாலை 5 மணிவரை கமலுக்காகக் காத்திருந்தனர். ஆனால் கமல் கடைசி வரைவே இல்லை.
அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார் என்ற தகவலை கடைசியில்தான் சொன்னார்கள்.
இந்த உண்ணாவிரதத்துக்கு அனைவரும் வந்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று நடிகர் சங்கம் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம்.
Post a Comment