திருநங்கை ரோஸ் நடிக்கும் படத்துக்கு கிரிக்கெட் ஸ்கேன்டல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகில் நடக்கும் சூதாட்டங்கள் மற்றும் உள் அரசியலை இந்தப் படத்தில் தோலுரித்துக் காட்டப் போகிறார்களாம்.
இப்படிக்கு ரோஸ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான திருநங்கை ரோஸ் நடிக்கும் படம் இது. ஒரு திருநங்கை ஹீரோயினாக நடிப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும் என பெருமையோடு கூறிக் கொண்டது கிரிக்கெட் ஸ்கேன்டல் குழு, சமீபத்திய பிரஸ் மீட்டில்.
இந்தரப் படத்தை இயக்குபவரும் ரோஸ்தான். ஏ செந்தில்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப் போகிறார்கள்.
படம் குறித்து ரோஸ் கூறுகையில், "இந்தப் படம் கிரிக்கெட் உலகின் இன்னொரு பக்கத்தை உலகுக்குக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் சூதாட்டம் மட்டுமே இதில் இல்லை. அரவாணிகளின் வாழ்க்கை பற்றியும் சொல்லியிருக்கிறேன்," என்றார்.
கிரிக்கெட் வீரர்களாக நடிக்கும் அனைவருமே புதுமுகங்கள். தெரிந்த முகங்களை அந்த ரோலில் நடிக்க வைத்தால் பிரச்சினை வரும் என்பதால் இந்த முடிவு என்றார் ரோஸ்.
Post a Comment