சென்னை: நேற்றுவரை கோமாளியாக நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை இன்றைக்கு அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். காரணம் ஒரே படத்தில் அவரின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.
பொங்கலுக்கு ரிலீசான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் மூன்று நாட்களில் 6 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை எட்டியது. இது சாதனையாக பேசப்பட்டது. இதில் நடித்திருந்த பவர்ஸ்டாரின் நடிப்புதான் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்ததாம். எனவே இயக்குனர்கள் பலரும் பவர் ஸ்டாரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சிவா- சந்தானம் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் பவர்ஸ்டார். இயக்குனர் ராஜேசின் அசிஸ்டன்ட் ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் சம்பளம் 50 இலட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சராசரி ஹீரோக்களுக்கே 50 இலட்சம் வழங்க யோசிக்கும் நிலையில், ஒரே படத்தில் 50 இலட்சம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பவர் ஸ்டாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இயக்குநர் சங்கரின் ‘ஐ' படத்தில் நடித்துவரும் பவர்ஸ்டார் அந்த படத்தின் ஹிட்டிற்குப் பின் சம்பளத்தை ஒருகோடியாக உயர்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பொறாமையுடன் கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.
Post a Comment