சென்னை : சன் டிவியில் ''சன் சிங்கர்'' என்ற குழந்தைகளுக்கான புதிய இசை நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதனை பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் தொகுத்து வழங்குகிறார்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. இதனை உணர்ந்து கொண்ட சேனல்கள் பெரும்பாலும் இசை, நடனம் சார்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இந்த வரிசையில் சன்டிவியும் இணைந்துள்ளது.
சன் டிவியில் வரும் ஞாயிறு முதல் காலை 10மணிக்கு ''சன் சிங்கர்'' என்ற குழந்தைகளுக்கான பிரமாண்டமான புதிய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் பங்கு பெறுகின்றனர். இதற்கான குரல் தேர்வு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்றுள்ளது. அதில் தேர்வான குழந்தைகள் சன் சிங்கரில் பங்கேற்று பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் தொகுத்து வழங்குகிறார்.
Post a Comment