சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ராஜகுமாரி சீரியல் விரைவில் தொடங்க உள்ளது.
சன் டிவியில் ‘தங்கம்' மெகா தொடர் தினசரி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கலெக்டர் கங்காவாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், அவரது கணவரும் இதில் கலெக்டர்தான். ஆனால் பல ஆண்டுகளாக ஒரு மாவட்டத்திலேயே நிரந்தரமாக குடியேறிவிட்ட கலெக்டர் அவர். அவருக்கு உதவியாக மனைவி ரம்யா கிருஷ்ணன் இருந்து வருகிறார்.
அவர்களின் குடும்பத்தைச் சுற்றி வரும் கதைதான். இரண்டு மனைவிகளைக் கொண்ட ஐயா விஜயகுமார். அவரது தங்கை முத்தரசியின் கணவர் குலசேகரன் தன்னுடைய ஜென்ம விரோதியாக ஜென்ம விரோதியாக கருதுகிறார். அதற்காக அவர் செய்யும் வில்லத்தனங்கள்தான் கொஞ்சம் அதிகப்படியானதுதான்.
அதேபோல் ஐயாவின் பங்காளி குடும்பத்தினர் சாந்தி வில்லியம்ஸ், அவரின் மகன்கள், மகள் ஆகியோர் செய்யும் வில்லத்தனங்கள் என கதை எங்கெங்கோ சுற்றி குழப்பி கும்மியடித்தார்கள்.
இடையில் குழந்தையில்லாத ரம்யா விற்கு உதவி செய்வதற்காக காயத்ரி கதாபாத்திரம் வேறு வந்தது. ஆனாலும் கதையின் போக்கை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் முடிக்கலாம் என்று ஒருவழியாக முடிவு செய்துவிட்டார்கள் போல.
இன்னும் சில தினங்களில் தங்கம் தொடருக்கு மங்களம் பாடிவிட்டு அதே நேரத்தில் புதிய தொடரான ராஜகுமாரியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
புதிய தொடர் முன்னோட்டம் போட ஆரம்பித்துவிட்டனர். இந்த தொடருக்காக காசி எல்லாம் போயிருப்பார்கள் போல. முதல் தொடரில் கங்கா என்று பெயர் வைத்திருந்த ரம்யா கிருஷ்ணன் சென்டிமென்ட் ஆக இந்த தொடரை கங்கை நதிக்கரையில் தொடங்குகிறார் போல. அவருடன் சரத்பாபு, கிட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் விரைவில் இந்த புதிய தொடரை சன் டிவியில் எதிர்பார்க்கலாம்.
Post a Comment