சென்னை: நான் மது அருந்துவது போல நடித்தால் அந்தப் படம் ஹிட் என்று சொன்னதோடு, தானாகத்தான் அப்படி ஒரு காட்சியை வைக்கச் சொன்னேன் என்று கூறிய த்ரிஷாவுக்கு மது பாட்டில்கள் பார்சல் அனுப்பப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
கோடம்பாக்கத்தில் நடிகர் அல்லது நடிகைகள் எப்போதடா எடக்குமடக்காக பேசுவார்கள் என்று காத்திருந்து அறிக்கை விடும் இந்து மக்கள் கட்சியின் இன்றைய அறிக்கை:
"மது அருந்துவது குறித்து திரிஷா சொன்னவை பண்பாட்டுக்கு எதிரான செயல். பெண்களை மது அருந்த தூண்டுபவை.
பெண்கள் மது அருந்துவது அவரவர் விருப்பம் என்று அவர் சொன்னதன் மூலம், பெண்களையும் குடிக்கத் தூண்டுகிறார்.
இதற்கு வருத்தம் தெரிவிக்க கேட்டும் திரிஷா கண்டு கொள்ளவே இல்லை. எனவே அவருக்கு மது பாட்டில்கள் பார்சலில் அனுப்பப்படும். அதோடு மதுவின் தீமையை விளக்கும் புத்தகமும் வைத்து அனுப்பப்படும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அனுப்பறதுதான் அனுப்பறீங்க... நல்ல 'சரக்கா' அனுப்புங்கப்பா!!
Post a Comment