பிரபுதேவா தாளத்திற்கு ஆடப்போகும் கங்னம் ஸ்டைல் புகழ் பிஎஸ்ஒய்?

|

Gangnam Style Hitmaker Psy Dance Prabhudeva Tune

டெல்லி: கங்னம் ஸ்டைல் பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தென்கொரிய கலைஞர் பிஎஸ்ஒய் பிரபுதேவாவின் தாளத்திற்கு ஆடவிருக்கிறார்.

பிரபுதேவா நடித்த 3டி டான்ஸ் படம் ஏபிசிடி. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழிலும் ரிலீஸானது. டான்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபுதேவாவின் டான்ஸ் திறமை பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தென் கொரிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று யுடிவி மோஷன் பிக்சர்ஸுடன் பேசி வருகிறது.

கொரிய மொழியில் பிரபுதேவாவின் கதாபாத்திரத்தில் கங்னம் ஸ்டைல் புகழ் பிஎஸ்ஒய் நடிப்பாராம்.

இது குறித்து யுடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூர் கூறுகையில்,

ஏபிசிடியின் உரிமையை வாங்க தென்கொரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்போதைக்கு இது குறித்து எதுவும் கூற முடியாது. இப்படத்தின் உரிமையைக் கேட்டு பலர் எங்களை அணுகுகின்றனர். படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்றார்.


 

Post a Comment