மும்பை: தனது காதலி பிரியா ரஞ்சல் படிப்பு முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதாம். அதனால் அவர் படிப்பை முடித்த பிறகே திருமணம் என்று பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது 9 வருட காதலியான நடிகை பிபாஷா பாசுவை பிரிந்த பிறகு வங்கியில் பணிபுரியும் பிரியா ரஞ்சலை காதலித்து வருகிறார். ஜான் பிரியாவை முதன்முதலாக ஜிம்மில் பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் அங்கு வைத்து பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது காதல் வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து ஜான் கூறுகையில்,
உலக வங்கியின் மும்பை கிளையில் பணிபுரியும் நண்பர்கள் மூலம் தான் நான் பிரியாவை முதன் முதலில் சந்தித்தேன். அதன் பிறகே பிரியா நான் போகும் ஜிம்மிற்கு வந்தார். தற்போது பிரியா லண்டனில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவர் படிப்பை முடிக்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். அவர் படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் என்றார்.
ஜானுக்கு தற்போது 40 வயதாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment