சென்னை: வரும் ஏப்ரல் மாதத்தில் கோச்சடையான் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிகிறது.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஷ்வின் இயக்கியுள்ளார். பட ஷூட்டிங் முடிந்தும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது.
இந்நிலையில் கோச்சடையானை கோடை விடுமுறை ட்ரீட்டாக வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் போல ரிலீஸ் செய்ய சௌந்தர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
கோச்சடையான் இசை வெளியீடு வரும் மார்ச் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடக்கும். ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு ரிலீஸாகும் முதல் படம் கோச்சடையான். அதனால் கோச்சடையான் ரிலீஸை ஒரு திருவிழா போன்று கொண்டாட ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.
Post a Comment