ஒரே ஒரு பெயர் மிஷ்கினின் 'ஓநாய்'க்குப் புதிய நிறத்தை, அந்தஸ்தைக் கொடுத்துவிட்டது. அந்தப் பெயர் இசைஞானி இளையராஜா!
ஆம்... இளையராஜாதான் மிஷ்கினின் அடுத்த படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இசையமைக்கிறார்.
இருவரும் முதல் முறையாக இணைந்த படம் நந்தலாலா. அபாரமான பின்னணி இசை, மனதை வருடும் பாடல்களால் அந்தப் படத்தை நிறைத்திருந்தார் இளையராஜா.
ஆனால் அந்தப் படத்தில் மிஷ்கின் செய்த ஒரு தவறு படத்தின் மீதான அப்பிராயத்தை மாற்றிவிட்டது. ஜப்பானிய படமொன்றின் அப்பட்டமான தழுவல் என்பது தெரிந்திருந்தும் அதை கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை மிஷ்கின்.
அதன் பிறகு வந்த யுத்தம் செய், முகமூடி ஆகிய இரு படங்களுக்கும் இசையமைத்திருந்தார் புதியவர் கே. அவற்றிலும் இசை சோடை போகவில்லை.
இப்போது மீண்டும் இசைஞானியுடன் கைகோர்த்துள்ளார் மிஷ்கின்.
முகமூடி தோல்வியால் மிஷ்கினின் இந்த ஓநாயை சற்றே எள்ளலாகப் பார்த்த அனைவர் மனதிலும், ராஜா இசை என்றதும் இப்போது படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Post a Comment