சூர்யா - அனுஷ்கா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.
சூர்யா நடிப்பில் முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற சிங்கம் படத்தின் தொடர்ச்சி சிங்கம் 2 என்ற பெயரில் தயாராகிறது.
இதில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்காவும் ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார்.
எஸ் லட்சுமணன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்க ஏராளமான புதுமுகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.
நாயகன் சூர்யா, நாயகிகள் அனுஷ்கா, ஹன்ஸிகா, சூர்யாவின் தம்பி கார்த்தி, நடிகர் சிவகுமார், இயக்குநர் லிங்குசாமி உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
+ comments + 2 comments
My best wishes to surya sir and the team of Singam 2
My best wishes to surya sir and the team of Singam 2
Post a Comment