மோகன் பாபு மகள் தயாரிப்பில் சசிகுமார் - சந்தானம்... தலைப்பு 'பிரம்மன்!'

|

Sasi Kumar Teams Up With Santhanam

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படத்துக்கு பிரம்மன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். சந்தானம் அவருடன் முதல் முறையாக இணைகிறார்.

தயாரிப்பாளராக லட்சுமி மஞ்சு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்றாலும், அவர் பல்வேறு வெற்றிப் படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். தெலுங்கில் லட்சுமி மஞ்சு தயாரித்துள்ள குண்டெல்லோ கோடாரி என்ற படம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள இப்படம் தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற பெயரில் விரைவில் வரவிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த வெற்றி களிப்போடு தமிழில் நேரடிப் படம் பண்ணுகிறார் லட்சுமி. பிரம்மன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தினை கமல்ஹாஸன், மெளலி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாக்ரடீஸ் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

 

Post a Comment