தோல்வியால் துவளாத தமன்னா.. தொடர்ந்து 3 இந்திப் படங்களில் ஒப்பந்தம்

|

Tamanna Gets 3 Offers Hindi   

முதல் படம் ஹிம்மத்வாலா படுதோல்வியைத் தழுவியதால், இந்தியில் இனி தமன்னா அவ்வளவுதான் என்று கூறப்பட்டது.

ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் தொடர்கிறது. தொடர்ந்து மூன்று இந்திப் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக ஹிம்மத்வாலா இயக்கிய சஜித் கானின் அடுத்த படத்திலும் தமன்னாவே ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிம்மத்வாலா தோல்வியால் வருத்தத்தில் இருந்த தமன்னாவுக்கு தெலுங்கில் வெளிவந்த ‘தடகா' பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் விதத்தில் தொடர்ந்து இந்தி வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துள்ளன.

சஜித் கான் அடுத்து இயக்கப் போகும் ஹிந்திப் படத்தில் இஷா குப்தா, சோனம் சௌஹான் ஆகியோருடன் மூன்றாவது நாயகியாக தமன்னா நடிக்கிறார்.

வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது.

அடுத்து அக்ஷய் குமார் ஜோடியாக ‘ஹம்ஷகல்' என்ற படத்திலும் தமன்னா நடிக்கப் போகிறார். இத்துடன் இன்னும் ஒரு படத்துக்கும் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தமிழில் அஜீத் ஜோடியாக நடித்து வரும் தமன்னாவுக்கு, தெலுங்கில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன.

 

Post a Comment