உலக சுற்றுச்சூழல் தினம் - மரக் கன்று நட்டார் விஜய்

|

சென்னை: உலக சுகதாதார தினத்தை முன்னிட்டு, சென்னையில் மரக் கன்று நட்டார் நடிகர் விஜய்.

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் நேற்று பூமித் தாயைக் காப்போம் என்ற தலைப்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானது. ஒரு ஆண்டு நடக்கும் இந்த பிரச்சாரத்தின் முதன் நாளான நேற்று அதனை மரக் கன்று நட்டு தொடங்கி வைத்தார் நடிகர் விஜய். இதன் பிரான்ட் அம்பாசடராகவும் விஜய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

vijay plants sapling on world environment day

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நடத்தப்படும் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எக்ஸ்னோராவின் இளைஞர் பிரிவு வி கோ க்ரீன் எனும் பெயரில் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியை ஜூலை 3 முதல் 9-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. மாணவர்கள் உள்பட 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்.

 

Post a Comment