'கஜினியால் வந்த குழப்பம்... நான் உயிரோடதான் இருக்கேன்!' - நயன்தாரா

|

Why Nayanthara S Name Pulled Jiah Khan   

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஜியா கானை நயன்தாரா என்று தவறாகக் கருதி, சமூக இணையதளங்களில் தகவல் பரவியதால் நயன்தாரா குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதற்குக் காரணம், இருவரும் கஜினி படத்தில் நடித்திருப்பதுதான். நயன்தாரா கஜினி படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார்.

அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது, நயன்தாரா வேடத்தில் நடித்தவர் ஜியா கான்.

ஜியாகான் இறந்ததும் ஆந்திராவில் உள்ள தெலுங்கு டி.வி. சேனல்கள் கஜினி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா கேரக்டரில் நடித்தவர் என்று செய்தி வெளியிட்டனர்.

செய்தி வாசிப்பாளர்களும் டி.வி.யில் இதைத்தான் வாசித்தார்கள். ஆனால் அவசரத்தில் பலரும் கஜினியில் நடித்த நயன்தாரா என்று கருதி, ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் பரப்பினார்கள்.

இதனால் கேரளாவில் உள்ள நயன்தாரா குடும்பத்தினரிடம் பலரும் துக்கம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். இதில் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நயன்தாராவை அவசரமாகத் தொடர்பு கொண்டனர்.

நயன்தாரா கேரக்டரில் இந்தி கஜினியில் நடித்தவர் தற்கொலை என்பதை தவறாக புரிந்துள்ளனர் என்று நயனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் பின்னர்தான் தெரியவந்தது. நயன்தாரா பேஸ்புக், ட்விட்டரில் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தனக்கு போன் செய்து விசாரித்தவர்களிடம், எல்லாம் கஜினியால் வந்த குழப்பம்... நான் உயிரோடதான் இருக்கேன். கவலைப்படாதீங்க, என்றாராம்.

 

Post a Comment