இசைஞானி இளையராஜாதான் என் வாழ்க்கையில் எல்லாம். அவர் என் ரத்தத்தில் இருக்கிறார், என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
ஒளிவு மறைவின்றி பேசுவதில் இன்றைய இளம் நடிகர்களில் முதலிடம் தனுஷுக்குதான். மனதிலிருப்பதை பெரும்பாலும் அப்படியே கொட்டிவிடுவார்.
சமீபத்தில் அவரிடம், 'நீங்கள் மரியான் மற்றும் ராஞ்ஜஹனா (அம்பிகாபதி) படங்களில் ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?,' என்று கேட்டிருந்தனர்.
அதற்கு தனுஷ் அளித்த பதில், அவர் இளையராஜாவுக்கு எத்தனை பெரிய ரசிகர் என்பதை உணர வைத்துள்ளது.
தனுஷ் அளித்த பதில்:
"இளையராஜாதான் எனக்கு ரொம்பப் பிடித்த இசையமைப்பாளர். அவர் இசைதான் எனக்கு தாலாட்டு. அவர் இசைதான் எனக்கு சாப்பாடு. இவர் இசைதான் என் இளமைப் பருவம். அவர் இசைதான் என் முதல் காதல். என் தோல்விகளிலும் அவர் இசைதான் துணை நின்றது... அவர் இசைதான் என் முதல் முத்தம்.. அவர் இசைதான் என் முதல் காதல் தோல்வி... அவர் இசைதான் என் வெற்றி... அவர் என் ரத்தத்தில் கலந்திருக்கிறார்!!"
-யப்பா... இதுக்குமேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.. தனுஷ் நீங்க கிரேட்!
Post a Comment