எனது முதல் ஹீரோயின் ஸ்ரீதேவி இல்லை... இப்போது முதல்வராக உள்ள மேடம் ஜெயலலிதாதான், என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
விகடன் மேடையில் இந்தவாரம் வாசகர் ஒருவரின் கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
பதினாறு வயதினிலே படத்துக்கு முன்பே, ஆர் செல்வராஜும் தானும் சொந்த வீடு என்ற கதையை உருவாக்கியதாகவும், அதனை ஜெயலலிதாவிடம் ஒரு மணி நேரம் சொல்லி 28 நாட்கள் கால்ஷீட் வாங்கியதாகவும், ஆனால் அன்றைய பெரிய இயக்குநர் ஒருவர் ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்ததால் அவரை இயக்கும் வாய்ப்பு போய்விட்டதாகவும் அந்த பதிலில் தெரிவித்துள்ளார் பாரதி ராஜா.
"அதே கதையைத்தான் ரொம்ப வருஷம் கழிச்சு 'புதுமைப் பெண்'ங்கிற பேர்ல ஏவி.எம். தயாரிச்சாங்க. ஜெயலலிதா மேடம் நடிக்க இருந்த 'புதுமைப் பெண்' கேரக்டர்ல ரேவதி நடிச்சிருந்தாங்க.
ஸோ, நான் ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ண முதல் ஆர்ட்டிஸ்ட் ஜெயலலிதா. அப்புறம் இந்த மாதிரி எந்தப் பஞ்சாயத்தும் வரக் கூடாதுன்னுதான் '16 வயதினிலே' படத்துல புதுப் பொண்ணா ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தினேன்!,'' என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா.
Post a Comment