சென்னை: நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற இருந்த ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளாகும். இதனையொட்டி அவரது ரசிகர்கள் சென்னையில் நாளை மறுதினம் பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தன. விஜய்யின் கட்-அவுட்களையும் ரோட்ரோங்களின் ரசிகர்கள் அமைத்து வந்தனர்.
இவ்விழாவில் விஜய் பங்கேற்று 3 ஆயிரத்து 900 ஆயிரம் ஏழைகளுக்கு நல உதவிகள், ஏழை மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, கம்ப்யூட்டர்கள், ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை வழங்குவதாக இருந்தது.
இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பஸ், வேன்களில் சென்னை புறப்பட தயாரானார்கள். இந்த நிலையில் இன்று இவ்விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து பேசிய அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், 8-ந்தேதி நடக்கவிருந்த விஜய் ரூ.1 கோடி நலத்திட்ட பணிகள் வழங்கும் விழா ரத்தாகியுள்ளது. எனவே வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னை வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment