மும்பை: தனக்கு ஜோடியாக நடித்த ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை வெகுவாக பாதித்துள்ளது.
ஜியா கான் தனது 18வது வயதில் 64 வயது அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ராம் கோபால் வர்மாவின் நிஷப்த் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இப்படி ஒரு வெயிட்டான ரோலா என்று திரையுலகம் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. ஆனால் அவர் பட வாய்ப்புகள் இன்றி, சொந்த வாழ்விலும் காதலில் தோல்வி அடைந்து இறுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 25 வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன் ஜியா கான் மரணம் குறித்து கூறுகையில்,
எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இது குறித்து பேசவே கஷ்டமாக உள்ளது. சில நேரங்களில் சிலர் வருத்தப்படுவதும், மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு. கனவுகளுடன் வருகிறார்கள், அது நிறைவேறவில்லை என்றால் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இது போன்று உங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது இல்லை. ஜியா கான் மரணம் என்னை வெகுவாக பாதித்துள்ளது என்றார்.
Post a Comment