அதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது: நித்யா மேனன்

|

No Need Act Like That Nithya Menon

ஹைதராபாத்: ஆடை குறைப்பெல்லாம் தனக்கு சரிபட்டு வராது என்றும், அப்படி நடிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளாராம் நித்யா மேனன்.

வெப்பம், 180 ஆகிய படங்களில் நடித்த நித்யா மேனன் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் பிசியாக இருக்கிறார். கன்னடப் படங்களிலும் கவனம் செலுத்துகிறார். ஆனால் எந்த மொழியில் நடித்தாலும் சரி கவர்ச்சிக்கு அவர் தடா போட்டுள்ளார். நடிப்பை வைத்தே ரசிகர்களை கவர விரும்புகிறார்.

அவர் குட்டையாக இருக்கிறார், சற்று பூசினாற் போல் இருக்கிறார், கவர்ச்சியாக இல்லை என்று வரும் விமர்சனங்களை அவர் கண்டுகொள்வதே இல்லையாம். தெலுங்கில் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டுகையில் நித்யா கவர்ச்சியே வேண்டாம் என்கிறார். அதையும் மீறி யாராவது அவரிடம் கொஞ்சம் கவர்ச்சியில் தாராளம் காட்டலாமே என்றால் அவர்களை எரிப்பது போன்று பார்க்கிறாராம்.

ஆடையை குறைத்து நடிப்பதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நல்ல கதாபாத்திரங்கள் மட்டும் தான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளாராம் நித்யா.

 

Post a Comment