விவாகரத்தா?: குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறோம்- நடிகர் அல்லு அர்ஜுன்

|

I M Not Divorcing My Wife Allu Arjun

ஹைதராபாத்: தான் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி என்பவரை காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் அவர் சினேகாவை விவாகரத்து செய்யப் போவதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நானும், சினேகாவும் ஒருவரையொருவர் பார்த்த நாளில் இருந்து கண்மூடித்தனமாக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமண வாழ்க்கை பிரச்சனை இன்றி சென்று கொண்டிருக்கிறது. நானும், என் மனைவியும் சந்தோஷமாக உள்ளோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 

Post a Comment