தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக ஆந்திர பட உலகில் கிசு கிசு பரவியுள்ளது.
அல்லு அர்ஜுன் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மச்சான் அல்லு அரவிந்த்தின் மகன் ஆவார்.
அல்லு அர்ஜுனுக்கு கடந்த 2011-ல் திருமணம் நடந்தது. சினேகா ரெட்டி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார். தற்போது அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவியுள்ளது.
தற்போது இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து தனியாக வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தெலுங்கு பட உலகிலும், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அல்லு அர்ஜுன் நடித்த 'இட்டற மயிலத்து' என்ற தெலுங்கு படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அவரது விவாகரத்து செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Post a Comment