சென்னை: சூர்யா தான் ஒரு காலத்தில் நடத்திய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
சூர்யா விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் சூர்யாவுக்கு பதில் பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
பிரகாஷ் ராஜ் வந்த பிறகு இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன், கௌதமி, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சூர்யா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இது குறித்து பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் சூர்யா. இந்த இளம் நடிகர் மற்றும் அவரின் அகரம் பவுன்டேஷன் நபர்களுடன் அருமையான தருணங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சூர்யா எவ்வளவு வென்றார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
Post a Comment