முன்னணி ஹீரோவா இருக்கணும்.. ஆனா இளமையா இருக்கணும்- காஜல்

|

முன்னணி ஹீரோவா இருக்கணும்.. ஆனா இளமையா இருக்கணும்- காஜல்  

இனி என்னோடு நடிக்கும் ஹீரோக்கள் முன்னணியில் இருப்பவராக இருக்க வேண்டும், இளமையாகவும் இருக்க வேண்டும். வயசான ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன், என தடாலடியாக அறிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

தனது 27-வது பிறந்த நாளை வியாழக்கிழமை மாலை ஹைதராபாதில் விமரிசையாகக் கொண்டினார் காஜல்.

தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகர்கள் பலரும் விருந்துக்கு வந்திருந்தனர். இவர்களில் வெங்கடேஷ், நாகார்ஜூனா போன்ற வயசான முன்னணி ஹீரோக்களும் அடங்குவார்கள்.

விழாவில் கேக் வெட்டிய பிறகு பேசிய காஜல் அகர்வால், 'நான் ஆரம்ப காலத்தில் புது ஹீரோக்கள், இரண்டாம் கட்ட வளரும் ஹீரோக்களுடன் நடித்தேன்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. விஜய் போன்ற பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். காரணம் என் மார்க்கெட் அப்படி. இந்த நேரத்தில் வளரும் நடிகர்களுடன் நடித்தால் நானும் சறுக்க வேண்டியதுதான்.

முன்னணி ஹீரோக்களாக இருக்க வேண்டும். அதே நேரம் அவர்கள் இளமையானவர்களாகவும் இருக்க வேண்டும். இதுதான் என் முதல் கண்டிஷன்," என்றார்.

காஜலின் இந்த அதிரடிப் பேச்சு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சீனியர் நடிகர்களுக்கு அதிர்ச்சிளிப்பதாக இருந்து.

சமீபத்தில் கமல் ஹாஸன் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

 

Post a Comment