சென்னை: சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம்-2 படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
சமீபத்தில் வந்த திரைப்படங்களில் சிங்கம் நல்ல வசூல் தரும் படமாக அமைந்துள்ளதாம். ஏற்கனவே வந்த சிங்கம் படத்தின் வெற்றியை அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதாம் சிங்கம்-2.
இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்த இப்படமும் துறுதுறு போலீஸ் கதை தான். படம் ரிலீசாகி 50 நாட்களைக் கடந்தும் இன்னும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்.
விரைவிலேயே படத்தின் 100வது நாள் வெற்றி விழா நடந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் சில தியேட்டர் உரிமையாளர்கள்.
Post a Comment