ஏங்க, கோச்சடையான் வருமா, வராதா?

|

ஏங்க, கோச்சடையான் வருமா, வராதா?

சென்னை: ரஜினியின் கோச்சடையான் வருமா, வராதா என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

கோச்சடையான் ஷூட்டிங் துவங்கி, முடிந்துவிட்டது. அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு தீபிகாவும் இந்தி படங்களில் படுபிசியாகிவிட்டார். கோச்சடையானில் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

இசை வேலையை முடித்துவிட்டேன் என்று ரஹ்மானும் கூறினார். இந்நிலையில் கோச்சடையான் தெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் ரிலீஸாவதாகவும், அதற்கான டப்பிங் நேற்று துவங்கியதாகவும் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரி, இசை வெளியீடு எப்பொழுது, படம் எப்பொழுது தான் ரிலீ்ஸ் ஆகும் என்பது குறித்து மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்கவே மாட்டேன் என்கிறார்கள். இதற்கிடையே கோச்சடையான் ரிலீஸாகாது என்று ஒரு வதந்தி வேறு கிளம்பியுள்ளது.

கோச்சடையான் பற்றி செய்தி வெளியிட்டால் ரசிகர்கள் வராத படத்திற்கு எதற்கு பில்ட்அப் என்று கேட்கின்றனர். அதனால் தயவு செய்து இசை வெளியீடு குறித்தாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு படம் நிச்சயம் வரும் என்று ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியை கூறுங்கள்.

 

Post a Comment