சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரபல சினிமா இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர். சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் பவர் ஏஜெண்ட்டுகள் மனுதாரராக இருக்க முடியும் என்று கூறி கஸ்தூரி ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
Post a Comment