மும்பை: வெல்கம் 2 இந்தி படத்தில் அசினுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு ஸ்ருதி ஹாஸனுக்கு சென்றதற்கு அவரது அப்பா ஜோசப் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
பாலிவுட்டில் கையில் படங்கள் இல்லாமல் இருந்து வந்தார் அசின். இந்நிலையில் அபிஷேக் பச்சனுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அசினை வைத்து ரெடி படத்தை எடுத்த அனீஸ் பாஸ்மி வெல்கம் 2 என்ற படத்தை எடுக்கிறார். இதற்காக முதலில் சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் அசினை நாயகியாக்க முடிவு செய்திருந்தார் பாஸ்மி.
இந்நிலையில் மார்க்கெட் இல்லாத நிலையில் அசினின் தந்தை ஜோசப் தொட்டும்கல் ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டாராம். சம்பளத்தில் சிறிதும் குறைக்க மாட்டேன் என்றும் அடம்பிடித்தாராம்.
இதையடுத்து தான் பாஸ்மி மார்க்கெட் இல்லாத அசினுக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது தேவையில்லை என்று நினைத்து ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.
Post a Comment