படம் ஓடாவிட்டாலும் நடிகரின் இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்லை

|

சென்னை: விரலை சுழட்டி சுழட்டி வித்தை செய்யும் நடிகரின் படங்கள் ஓடாவிட்டாலும் அவர் செய்யும் பந்தாவுக்கு மட்டும் குறைச்சலே இல்லையாம்.

விரலை சுழட்டுவதற்கு பெயர் போன அந்த நடிகர் 2 படங்களில் பலகாலமாக நடித்து வருகிறார். அந்த படங்களில் ஒன்றின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்து விட்டது போன்று. மற்றொன்றின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துள்ளதாம்.

இந்நிலையில் அந்த நடிகர் மெரினா இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தை நடிகரே தயாரிக்கவும் செய்கிறார். அவர் தயாரிக்க முன் வந்தாலும் கையில் இருந்து காசு வெளியே வரமாட்டேன் என்கிறதாம். நான் எல்லாம்... என் படத்திற்கு செம கிராக்கி உள்ளது ஈசியாக ரூ.40 கோடி வரை வியாபாரம் நடக்கும். அதனால் டிவி சேனல்களுக்கு உரிமையை வழங்கி அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே படத்தை எடுக்கலாம் என்கிறாராம்.

இதையடுத்து வினியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்தால் நடிகரின் கடைசி 3 படங்களும் பப்படமான நிலையில் இது வேறாக்கும் என்று யாரும் வர மாட்டேன் என்கிறார்களாம்.

 

Post a Comment