இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சியில் மேகா ஆடியோவை வெளியிட்ட கமல்!

|

லண்டன்: இளையராஜா இசையில் உருவான மேகா படத்தின் இசை - பாடல்கள் லண்டனில் நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

நடிகர் கமல்ஹாஸன் மற்றும் இளையராஜா இதனை வெளியிட, அய்ங்கரன் கருணா பெற்றுக் கொண்டார்.

ஜிபி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படம் மேகா. கார்த்திக் ரிஷி இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சியில் மேகா ஆடியோவை வெளியிட்ட கமல்!

இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. 32 ஆண்டுகளுக்கு முன் இளையராஜா இசையமைத்த புத்தம் புதுக்காலை என்ற பாடல் இந்தப் படத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இசை மற்றும் பாடல்களை லண்டனில் நடந்த ராஜா தி ராஜா இசை நிகழ்ச்சியின்போது வெளியிட்டனர்..

இளையராஜாவும் கமல்ஹாஸனும் இசையை வெளியிட, அய்ங்கரன் கருணா மற்றும் லைக்கா மொபைல் நிறுவனத் தலைவர் பெற்றுக் கொண்டனர்.

இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சியில் மேகா ஆடியோவை வெளியிட்ட கமல்!
 

Post a Comment