துபாயைச் சேர்ந்த பல் டாக்டர் ஜெஸ்லியை நேற்று மணந்தார் நடிகர் பரத். திருமண வரவேற்பு வரும் 14-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.
பரத்துக்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா - ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லி (பல்மருத்துவர்)ஆகிய இருவருக்கும் திருமணம் 09.09.2013 ஆம் தேதி பெற்றோர் முன்னிலையில் நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர்14 அன்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடக்கிறது.
திரைப்படத் துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
Post a Comment