கோச்சடையான் ட்ரைலர் எப்படி? உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

|

இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சரிங் 3 டி படம் என்ற அறிவிப்போடு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகிவிட்டது.

இணையத்திலும், வெளியிலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த டீசர் குறித்து கலவையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான ரசிகர்கள் இந்த டீசர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தாலும், சிலர் தங்கள் அதிருப்தியையும் காட்டியுள்ளனர்.

மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்திலும் நிஜ ரஜினியின் உருவம் மற்றும் ஆக்ஷனையே எதிர்ப்பார்த்த தீவிர ரசிகர்கள், இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கோச்சடையான் ட்ரைலர் எப்படி? உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

சிலர், அட பொம்மைப் படம் மாதிரி பீல் பண்ண வச்சிருச்சே இந்த சவுந்தர்யா என்று தெரிவித்துள்ளனர்.

மற்றொரு தரப்போ, 'இந்த வகை தொழில்நுட்பத்தில் இந்தியாவில் வெளியாகும் முதல் படம் கோச்சடையான். இது முதல் டீசர்தான். அதுவும் சில நொடி காட்சிகள் மட்டுமே. படத்தில் ரஜினியின் நிஜ உருவமே தோன்றும் காட்சிகளும் உள்ளதால், முழுமையான ட்ரைலர் வரும்வரை பொறுத்திருப்போம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் விமர்சகர் தரன் ஆதர்ஷ் இந்த டீசரை பாராட்டியுள்ளார். இந்திய தரத்தில் இப்படி ஒரு படத்தை உருவாக்கியிருப்பதே சாதனை என்றும், இந்த வகைப் படங்கள் வெளிவர ரஜினி பிள்ளையார் சுழி போட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி கருத்துகள் கலவையாக இருந்தாலும், நிமிடத்துக்கு நிமிடம் இந்த டீசரைப் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தத் தலைமுறையிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர் பலரும்.

சரி, இந்த டீசைரை நீங்க பாத்துட்டீங்களா... உங்க கருத்து என்ன?

 

+ comments + 1 comments

10 September 2013 at 18:22

enga thaliver kalaki irukar uh,samaya irukka teaser,we are waiting for the moview,sekaram release panuga thaliva

Post a Comment