ஓணம் பண்டிகை கேரளாவிற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி

|

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகை வாரவிழாவில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினாராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் பாரம்பரியம்மிக்க பண்டிகையாக திருவோணம் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. அஸ்தம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் நடைபெறும் விழாவை மலையாள மொழி பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

கேரளா சுற்றுலாத்துறை சார்பில் ஓணம் வாரவிழா வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6.30 மணி அளவில் திருவனந்தபுரம் சந்திரசேகரன் நயார் ஸ்டேடியத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி விழாவை தொடங்கி வைக்கிறார்.

ஓணம் பண்டிகை கேரளாவிற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி, பிரதிவிராஜ்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை ஸ்ரீதேவி கலந்து கொள்கிறார். பிரபல நடிகர் பிரதிவிராஜ், எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன், சுற்றுலா துறை அமைச்சர் அனில்குமார், மேயர் சந்திரிகா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பிரபல பெருவனம் குட்டன் மாரார் தலைமையில் 101 கலைஞர்கள் கலந்து கொள்ளும் பாண்டிமேளம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினசரி கலை நிகழ்ச்சிகள்

20ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் 27 இடங்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், இசை, நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஓணம் பேரணி

இறுதிநாளான 20ம் தேதி பிரசித்த பெற்ற ஓணம் பேரணி நடைபெறும். இதில் கண்கவர் அலங்கார ஊர்திகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

குவியும் காய்கறிகள்

இப்பண்டிகைக்கு தேவையான காய்கறிகள், பூக்கள் ஆகியவை தமிழகத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகின்றன. நெல்லை நயினார் மார்க்கெட்டில் இருந்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், பத்தினம்திட்டா,மூணார், உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காய்கறிகள் லாரி லாரியாக கொண்டு செல்லப்படும். கேரளாவில் திருவோணம் கொண்டாடும் சூழலில் நெல்லை மார்க்கெட்டுக்கு தற்போது காய்கறிகள் மூடை மூடையாக குவிய தொடங்கியுள்ளன.

விலை உயர்வு

மார்கெட்டுககு வராத காய்கறிகள் பெங்களூரு, ஓசூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் பூசணி, தடியங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே கோவில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவில்லை. எனவே அவை வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் கடுமையாக உயர்ந்துள்ளது.

 

Post a Comment