சினிமாவில் எனக்கு நிறைய ராணிகள் இருக்கிறார்கள்… ஆர்யா

|

சினிமாவில் எனக்கு நிறைய ராணிகள் இருக்கிறார்கள்… ஆர்யா

சினிமாவில் எனக்கு நிறைய ராணிகள் இருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் ராணியாக போகும் பெண்ணை இதுவரை நான் கண்டுபிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஆர்யா.

இன்றைக்கு ஊடகங்களில் அதிகம் கிசுகிசுவில் இடம் பெறும் ஜோடி ஆர்யா - நயன்தாராதான்.

‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் இணைந்த இந்த ஜோடி இப்போது ‘ராஜாராணி' படத்தில் இணைந்து நடிக்கின்றனர் இதற்கான விளம்பரமே இருவரின் திருமண போஸ்டர்தான். இதனால் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆர்யா, ‘ராஜா ராணி' படத்தில் நயன்தாராவும் நானும் கணவன்-மனைவியாக நடிக்கிறோம். படத்தில் எங்களின் திருமண காட்சியொன்று உள்ளது. அதை படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தினர். இதற்காக எங்களை இணைத்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. என்னைப் பற்றி இதுபோன்ற செய்திகள் வெளியாகும் போது நான் சினிமாவில் இன்னும் இருக்கிறேன் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. ஏனென்றால் பிரபலமாக இல்லாதவர்களை கண்டு கொள்ளமாட்டார்கள்.

பெற்றோர் நிச்சயித்து நடக்கும் நிறைய திருமணங்கள் ‘ஈகோ', தகராறு காரணங்களால் நன்றாக இல்லை. அந்த ‘கரு' ராஜா ராணி படத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கதை மிகவும் பிடித்தது. வசனங்களும் சிறப்பாக உள்ளன. இதில் துறுதுறு இளைஞனாகவும், கணவனாகவும் இரு கெட்டப்பில் வருகிறேன். நான் எதையும் மறைக்க மாட்டேன், எனக்கு காதல் ஏற்பட்டால் உடனே ரசிகர்களுக்கு தெரிவித்து விடுவேன் இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.

 

Post a Comment