பீட்ஸா 2 வில்லாவிற்கு யுஏ சான்றிதழ்… வரிச்சலுகை கட்!

|

பி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் பீட்சா 2 - வில்லா படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன்மூலம் வரிச்சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டது சென்சார்.

பீட்சா மாதிரியே, வில்லா படமும் திகில் கதையம்சம் கொண்டதுதான். பீட்ஸாவில் ஆவி எதுவும் கிடையாது. வில்லாவில் ஆவி உண்டாம். குழந்தைகள் பெற்றோர்களின் துணையில்லாமல் பார்க்க முடியாது என்பதால் சென்சார் யுஏ சான்றிதழ் தந்துள்ளது.

தமிழக அரசின் 30 சதவீதம் வரிச்சலுகை பெற முக்கியமான இரண்டு விதிகள் உண்டு. அதன்படி படத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும், யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பின்னதில் வில்லா கோட்டைவிட்டதால் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

பீட்ஸா 2 வில்லாவிற்கு யுஏ சான்றிதழ்… வரிச்சலுகை கட்!

மிரட்டும் டிரைலர்

படத்தின் டிரைலரே மிரட்டலாக அமைந்துள்ளது. படம் பற்றி கூறிய இயக்குநர் தீபன் சக்ரவர்த்தி, வில்லா' திரைப்படம் ‘பீட்சா'வின் தொடர்ச்சி அல்ல. இது வேறு; அது வேறு. ஆனால், ‘பீட்சா' போல் ஒரு வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இது எடுக்கப்பட்டிருக்கும். ஒரு வீட்டுக்குள் நடக்கும் சில முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை. இது பேய் படம் அல்ல. கிளாசிக்கல் திகில் படம். சஸ்பென்ஸ் உடைந்து விட்டால் த்ரில் போய்விடும் என்பதால், கதை பற்றி இதற்குமேல் எதுவும் சொல்ல முடியாது என்றார்.

பீட்ஸா 2 வில்லாவிற்கு யுஏ சான்றிதழ்… வரிச்சலுகை கட்!

முதன் முறையாக இந்த படமானது டால்பி அட்மாஸ் என்ற நவீனதொழில் நுட்பத்தில் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாம். இது ரசிகர்களுக்கு புதுமையான உணர்வையும், அனுபவத்தையும் ஏற்படுத்தும். இந்த படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

 

Post a Comment