2 நாட்களில் 2.1 மில்லியன் பேர் பார்த்த கோச்சடையான் டீசர்... இணையத்தில் புதிய சாதனை!

|

சென்னை: பொம்மை மாதிரி இருக்கு, கார்ட்டூன் ரஜினி, மொக்கை என்று ஒரு தரப்பினர் கமெண்ட் அடித்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2 நாட்களில் 2.1 மில்லியன் பேர் பார்த்த கோச்சடையான் டீசர்... இணையத்தில் புதிய சாதனை!  

கோச்சடையானுக்கு இப்போது வெளியாகியிருப்பது ட்ரைலர் அல்ல. படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் 30 செகன்ட் டீசர் மட்டும்தான்.

படத்தின் ட்ரைலர் இனிமேல்தான் வரவிருக்கிறது. இப்போது வெளியான டீசரே 21 லட்சம் பார்வையாளர்களை இந்த 48 மணி நேரத்துக்குள் சென்றடைந்திருக்கிறது. பிரமாண்ட ஹாலிவுட் படங்கள் கூட இத்தனை குறுகிய அவகாசத்தில் இவ்வளவு பார்வையாளர்களைச் சென்றடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விமர்சனங்கள் இந்த டீசர் குறித்து கூறப்பட்டாலும், எப்படி இருக்கிறதென்று நாமும்தான் பார்ப்போமே என யுட்யூப் போய் பார்த்தவண்ணம் உள்ளனர் சினிமா விரும்பிகள்.

'5 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை இந்த ட்ரைலர் சென்று சேரவேண்டும் என்பதை ரஜினி ரசிகர்கள் மனதில் கொள்ள வேண்டும்,' என சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இணைய பாவனையாளர்களிடையே ரஜினியின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இது ஒரு குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.

{video}

 

Post a Comment