செக் மோசடி வழக்கு: நடிகை பிரீத்தி ஜந்தாவுக்கு எதிராக மும்பை கோர்ட் பிடிவாரண்ட்

|

செக் மோசடி வழக்கு: நடிகை பிரீத்தி ஜந்தாவுக்கு எதிராக மும்பை கோர்ட் பிடிவாரண்ட்

மும்பை: செக் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் படங்களுக்கு வசனம் எழுதிய அப்பாஸ் டயர்வாலாவுக்கு அவர் ரூ.18.9 லட்சத்திற்கான செக்கை வழங்கியுள்ளார். ஆனால் அந்த செக்கை வங்கியில் அளித்த போது அது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து பிரீத்தி மீது செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பிரீத்தி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் இன்று(12ம் தேதி) ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் இன்றும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்பு ஒரு முறை ஆஜராகாமல் அவர் ரூ.2,000 அபராதம் கட்டினார். மேலும் இந்த வழக்கில் அவர் நீதிமன்ற உத்தரவை 4 முறை அவமதித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment