சென்னை: எந்தப் படமாக இருந்தாலும் அதை கடைசி நேரத்தில் தடை பண்ணக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
விகடன் மேடையில் வாசகர் ஒருவர், "கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டபோது முதல் குரல் கொடுத்து உங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தீர்கள். ஆனால், விஜய் நடித்த 'தலைவா' படம் அதே மாதிரியான பிரச்னையில் சிக்கியபோது யாரும் குரல் கொடுக்கலையே... ஏன்?'' என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள பிரகாஷ் ராஜ், "தலைவா' படத்தை கடைசி நேரத்தில் தடை பண்ணக் கூடாதுனு ட்விட் செஞ்சு, முதல் ஆளா கருத்து சொன்னது நான்தான். 'விஸ்வரூபம்' படத்துக்கு ட்விட் பண்ணது உங்க கவனத்துக்கு வந்தது. 'தலைவா' படத்துக்கு ஆதரவாப் பேசினது உங்களை வந்து சேரலை. அதுக்கு நான் என்ன பண்றது?
இப்பவும் சொல்றேன், நாளைக்குப் படம் ரிலீஸ்னா, இன்னைக்கு வந்து 'நிறுத்துங்க'னு தடை போடாதீங்க. ஒரு தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டமும் பல பேரோட உழைப்பும் திருட்டு டி.வி.டி மூலமா திருடு போற கொடுமையும்தான் நடக்கும்!,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment