தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிகழ்ச்சி மீலோ எவரு கோடீஸ்வரடு. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 40வது எபிசோடுடன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் இப்போது மா தெலுங்கு தொலைக்காட்சியில் மீலோ எவரு கோடீஸ்வரடு (உங்களில் யார் கோடீஸ்வரர்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
சின்னத்திரையில் நாகர்ஜூனா
'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவாக்கமான 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்ற நிகழ்ச்சி 'மா' தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நாகர்ஜூனா நடத்தும் இந்த நிகழ்ச்சி பெண் ரசிகைகளிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதாம்.
ஆந்திரா மக்கள் வரவேற்பு
திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சாலையில் போக்குவரத்து குறைந்து விடுகிறதாம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மீது மோகம் கொண்டு திரிகிறார்கள் ஆந்திர மக்கள்.
ரசிகர்களுக்கு நன்றி
"இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இதன் மூலம் சாதாரண மக்கள் மனதிலும் நான் இடம் பிடித்திருக்கிறேன். இந்த அளவுக்கு நிகழ்ச்சியை உயர்த்தி பிடித்த மக்களுக்கு என் நன்றி" என்கிறார் நாகர்ஜுனா.
எகிறிய டிஆர்பி
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினார் பொழுதுபோக்கு சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது நாகர்ஜூனாவின் கோடீஸ்வரன் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியின் விளம்பர வருவாய் சில கோடியை தாண்டியிருக்கிறதாம்.
நடிகர், நடிகையர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வித்யாபாலன், ஷ்ரேயா, லட்சுமி மஞ்சு, இளம் ஹீரோவான அல்லரி நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பல லட்சம் பரிசினை தட்டிச்சென்றுள்ளனர்.
சிரஞ்சீவி கலகலப்பு
சமீபத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பூட்டினார். நாகார்ஜுனாவின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் சிரஞ்சீவி இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டதாகவும் தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் முடிவு
டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் 40வது எபிசோடுடன் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment