தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ரஜினியின் லிங்கா படப் பாடல்கள், வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதியன்றி வெளியிடுவதற்காக, பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது லிங்கா திரைப்படம்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியுள்ளது.
படத்தின் இசை வெளியீடு தீபாவளியன்று நடக்கும் என்று முதலில் கூறியிருந்தனர். ஆனால் அன்றைய தினம் லிங்காவின் புதிய போஸ்டர்கள் மட்டுமே வெளியாகின. மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் மாதிரி ஆக்ரோஷமான, ஸ்டைலான ரஜினியை அதில் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் தரப்பில் தேதியை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நவம்பர் மாதம் லிங்காவின் இசை வெளியீடு நிச்சயம் என்று அறிவித்துள்ளனர்.
Post a Comment