உலகமெங்கும் 4000 அரங்குகளுக்கு மேல் வெளியான ஷாரூக்கானின் ஹேப்பி நியூ இயர் படத்துக்கு முதல் நாள் மட்டும் ரூ 44.97 கோடி வசூல் கிடைத்துள்ளது.
இந்தியப் படங்களில் இதுதான் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஹேப்பி நியூ இயர் படத்தை ஃபரா கான் இயக்கியுள்ளார். ஷாரூக்கான் தயாரித்து நடித்துள்ளார். அவருக்கு ஜோடி தீபிகா படுகோன்.
ரூ 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், நேற்று அக்டோபர் 24-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. முதல் நாளிலேயே இந்தப் படம் பெரும் வசூலைக் குவித்துள்ளது. இந்தி, தமிழ் - தெலுங்கு டப்பிங், மற்றும் சர்வதேச அளவில் இந்தப் படம் ரூ 44.97 கோடியைக் குவித்துள்ளதாக ரெட் சில்லிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காத பெரிய முதல் நாள் வசூல் இது.
இந்தியில் மட்டும் 42.62 கோடியைக் குவித்துள்ளது இந்தப் படம். தெலுங்கில் 1.43 கோடியும், தமிழில் 0.92 கோடியும் இந்தப் படத்துக்கு குவிந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை முதல் நாளில் ஒரு இந்திப் படத்துக்கு இவ்வளவு வசூல் குவிந்திருப்பது பெரிய விஷயமாகும்.
Post a Comment