'மாஸ்' படத்தின் போஸ்டர் காப்பி என்று இணையத்தில் பலராலும் கூறிவருவதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார். நன்றாக உற்றுப் பாருங்கள் இந்த போஸ்டர் காப்பியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.
தீபாவளி தினத்தன்று 'மாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. அதன்படி, தீபாவளி அன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஹாலிவுட் படத்தின் போஸ்டர் டிசைனைக் காப்பி அடித்துவிட்டார் வெங்கட்பிரபு என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தார்கள். அந்த போஸ்டருடன் 'போர்ன் ஐடென்டி' போஸ்டர் படத்தைச் சேர்த்து காப்பிதான் என பகிரப்பட்டன.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு அளித்துள்ள விளக்கத்தில், " 'மாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியிட்டோம். அந்தப் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது மட்டுமன்றி, ட்ரெண்ட்டும் ஆனது.
ஆனால், ஒரு தரப்பினர் மட்டும் இந்தப் போஸ்டர் பிரபலமான ஹாலிவுட் படத்தின் காப்பி என்று தவறான தகவல்கள் பரப்பி வருகிறார்கள்.
போஸ்டர் காப்பி என்று கூறுபவர்களுக்காக தெரிவிக்கிறேன். அப்படத்தின் போஸ்டர் 'மக்ஷாட் (MUGSHOT) என்ற தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியது.
அதன் மூலம் பல ஹாலிவுட் படங்களின் போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே, தமிழ் சினிமா ரசிகர்கள் காப்பி என்று கூறும் முன் அவற்றை உற்று நோக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார் வெங்கட்பிரபு.
Post a Comment