கத்தி பட திருட்டு விசிடி.. ரசிகர்கள் ரெய்ட்... போலீசில் புகார்!

|

கத்தி படத்தின் திருட்டு டிவிடி கடைகளில் கிடைப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் தாங்களாகவே சோதனை நடத்தி ஏராளமான டிவிடிக்களை பறிமுதல் செய்தனர்.

விஜய், சமந்தா நடித்த ‘கத்தி' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் திருட்டு சிடிவிக்கள் திருவான்மியூர் மற்றும் பெருங்குடி பகுதியில் விற்கப்படுவதாக விஜய் ரசிகர்களுக்குத் தகவல் கிடைத்தது.

கத்தி பட திருட்டு விசிடி.. ரசிகர்கள் ரெய்ட்... போலீசில் புகார்!

இதையடுத்து தென்சென்னை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்கள் விரைந்து சென்று சோதனை நடத்தி 200 - க்கும் மேற்பட்ட ‘கத்தி' பட திருட்டு சி.டி.க்களைக் கைப்பற்றினர்.

அவற்றை திருவான்மியூர், கானகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

 

Post a Comment