'விஜய்'க்காக பிரமாண்டமாக தயாராகும் அரண்மனை, தர்பார்

|

சென்னை: சிம்புதேவன் தான் விஜய்யை வைத்து இயக்கும் படத்திற்காக கோவளம் அருகே பிரமாண்டமான அரண்மனை செட் போட்டு வருகிறாராம்.

விஜய் முருகதாஸின் கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என்று இரு நாயகிகள். மேலும் பல காலம் கோலிவுட் பக்கமே வராத ஸ்ரீதேவி இந்த படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

'விஜய்'க்காக பிரமாண்டமாக தயாராகும் அரண்மனை

இப்படி நட்சத்திரப் பட்டாளம் உள்ள இந்த படத்திற்காக கோவளம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் அரண்மனை, தர்பார் செட் அமைத்து வருகிறார்களாம். இந்த செட் அமைக்கும் பொறுப்பை கலை இயக்குனர் முத்துராஜ் ஏற்றுள்ளார்.

விஜய் 58 என்று தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வித்யுலேகா ராமனும் நடிக்கிறார். ஜில்லா படத்தை அடுத்து அவர் இந்த படத்திலும் விஜய்யுடன் நடிக்கிறார்.

படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

 

Post a Comment