சென்னை: தமிழக மீனவர்கள் அச்சுறுத்தலின்றி தங்கள் தொழிலை மேற்கொள்ளத் தக்க வகையில் பாதுகாப்பு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விஜய்.
போதைப் பொருள் கடத்தியதாக போடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டில் இலங்கை நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்ற 5 தமிழ் மீனவர்கள், பிரதமர் மோடியின் முயற்சியால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் ஐந்து பேரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.
இவர்களைக் காப்பாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு விஜய் நன்றி கூறியிருந்தார். மேலும் மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனவர்கள். இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு இப்படி தேவையற்ற தொந்தரவுகள், மேலும் அச்சுறுத்தலையும் தரும்.
இந்த சமூக மக்கள் இனி வரும் காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தர பிரதமர் மோடி முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment