சென்னை: வலியவன் படத்துக்காக மீண்டும் இணைகிறார்கள் எங்கேயும் எப்போதும் சரவணன் மற்றும் ஜெய்.
எஸ்கே ஸ்டியோஸ் சார்பில் கே என் சம்பத் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை சரவணன் இயக்க, ஜெய் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், "பண்ணையாரும் பத்மினியும்" பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மென்மையான காதலை மையமாக கொண்டது இத்திரைப்படம் என்கிறார் இயக்குநர் சரவணன்.
இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. மேலும் படத்தின் முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் படமாக்க படவுள்ளது.
இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நா முத்துக்குமார் பாடல்கள் எழுதுகிறார்.
Post a Comment