ஏப்ரல் 17-ம் தேதி விஜய் ஆன்டனியின் 'இந்தியா பாகிஸ்தான்'

|

விஜய் ஆன்டனி நடித்துள்ள இந்தியா பாகிஸ்தான் படத்தை வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சலீம் படத்துக்குப் பிறகு விஜய் ஆன்டனி - சுஷ்மா ராஜ் நடித்துள்ள படம் இந்தியா பாகிஸ்தான். இந்தப் படத்தை விஜய் ஆன்டனியே தயாரித்துள்ளார்.

ஏப்ரல் 17-ம் தேதி விஜய் ஆன்டனியின் 'இந்தியா பாகிஸ்தான்'

புதுமுகம் ஆனந்த் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது.

பசுபதி, ஜெகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இந்த மாதத்தில் உத்தமவில்லன், நண்பேன்டா, ஓகே கண்மணி, வை ராஜா வை என முக்கியமான படங்கள் வெளியாகின்றன. அவற்றுடன் இந்தியா பாகிஸ்தானும் இணைகிறது.

 

Post a Comment