லிங்கா படத்துக்கு வரிச்சலுகை வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நாளை தள்ளி வைத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
"லிங்கா என்பது தமிழ் பெயர் இல்லை. இது சமஸ்கிருத வார்த்தையாகும். மேலும், லிங்கா படத்தின் கதை தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக இல்லை.
எனவே, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசும், ரஜினிகாந்தும் தகுதியில்லாத படத்துக்கு வரிசலுகை பெற்று, அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்," என்று குற்றம்சாட்டி, அந்தப் படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான மெரினா பிக்சர்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ நடராஜன் நாளை ஆஜராகிறார்.
Post a Comment